Skip to content

உங்கள் தகவலின் தனியுரிமையைப் பராமரிப்பது The National Center for Missing & Exploited Children அமைப்புக்கு முக்கியமாகும் (கூட்டாக “NCMEC,” “நாங்கள்,” “நாம்,” அல்லது “எங்கள்”). இந்தத் தனியுரிமைக் கொள்கை (“தனியுரிமைக் கொள்கை”) எங்கள் Take It Down வலைதளத்தின் (“தளம்”) பார்வையாளர்கள் மற்றும் பயனர்கள் பற்றிய தகவல்களை NCMEC எவ்வாறுசேகரிக்கிறது, பயன்படுத்துகிறது, பராமரிக்கிறது, வெளிப்படுத்துகிறது மற்றும் பாதுகாக்கிறது என்பது பற்றிய தகவலை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. NCMEC-இன் பொதுவான தனியுரிமை நடைமுறைகள் அல்லது NCMEC பற்றியதகவலுக்கு, எங்கள் முதன்மை வலைதளத்தைப் பார்க்கவும்.

இந்தத் தனியுரிமைக் கொள்கையிலுள்ள குறிப்பிட்ட தலைப்புகளை அணுக கீழுள்ள பொருத்தமான லிங்குகளைக் கிளிக் செய்யவும்:

 

NCMEC சேகரிக்கும் தகவல்கள்

NCMEC தகவலை எவ்வாறு சேகரிக்கிறது

NCMEC தகவலை எவ்வாறு பயன்படுத்துகிறது

NCMEC தகவலை மூன்றாம் தரப்பினரிடம் எவ்வாறு வெளிப்படுத்துகிறது

குக்கீக்கள் மற்றும் பிற தடம் காணும் தொழில்நுட்பங்கள்

பாதுகாப்பு

தக்கவைப்பு

குழந்தைகளின் தனியுரிமை

மூன்றாம் தரப்பினர் மற்றும் பிற வலைத்தளங்களுக்கான லிங்குகள்

இந்தத் தனியுரிமைக் கொள்கையில் மாற்றம்

தொடர்புத் தகவல்

NCMEC சேகரிக்கும் தகவல்கள்

இந்தத் தளத்தில் தெரிந்தே நாங்கள் உங்களை அடையாளப்படுத்தக் கூடிய தகவல்களைச் சேகரிப்பதில்லை.

NCMEC தகவலை எவ்வாறு சேகரிக்கிறது

ஒரு புகைப்படத்தின் ஹாஷ் செய்யபட்ட பதிப்பை நீங்கள் எங்களுக்குச் சமர்ப்பிக்கும் போது, அந்த ஹாஷுக்கு அடையாளப்படுத்தக்கூடிய தகவலை உள்ளடக்காத ஒரு தனித்துவமான டிஜிட்டல் ஃபிங்கர் பிரிண்ட் ஒதுக்கப்படுகிறது. நீங்கள் சமர்ப்பிக்கும் புகைப்படத்தின் ஹாஷ் செய்யபட்ட பதிப்பின் அடிப்படையில் நாங்கள் புகைப்படத்தைப் பார்க்கமாட்டோம் மற்றும் எங்களால் பார்க்க முடியாது. கூடுதலாக, நீங்கள் எங்களிடம் ஒரு புகைப்படத்தின் ஹாஷ் செய்யப்பட்ட பதிப்பைச் சமர்ப்பிக்கும் போது, புகைப்படத்தின் கோப்புப் பெயரை எங்களால் அணுக முடியும். அந்தக் காரணத்திற்காக, உங்கள் பெயர் அல்லது பிறந்ததேதி போன்ற உங்களை அடையாளப்படுத்தும் எந்தத் தகவலையும் உங்கள் கோப்புப் பெயரில் சேர்க்க வேண்டாம் என்று பரிந்துரைக்கிறோம். குக்கீகளைப் பயன்படுத்துவதன் மூலம் வலைத்தளத்துடனான உங்கள் தொடர்புகள் பற்றிய வரையறுக்கப்பட்ட தகவலையும் நாங்கள் சேகரிக்கலாம். குக்கீகளைப் பயன்படுத்துவது பற்றிய கூடுதல் தகவலுக்கு, “குக்கீகள் மற்றும் பிறதடம் காணும் தொழில்நுட்பங்கள்” என்ற தலைப்பில் கீழே உள்ள பகுதியைப் பார்க்கவும்.

NCMEC தகவலை எவ்வாறு பயன்படுத்துகிறது மற்றும் செயலாக்குகிறது.

இந்தத் தளத்தில் விவரிக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்காக மட்டுமே NCMEC உங்கள் தகவலைப் பயன்படுத்தும், இது பொதுவாக இணையத்தில் இருந்து ஆபாசப் புகைப்படங்களை அகற்ற உதவும். பயனர்களிடமிருந்து அடையாளப்படுத்தும் தகவல்களை நாங்கள் தெரிந்தே சேகரிப்பதில்லை; உங்களை அடையாளடப்படுத்தும் தகவலை ஒரு கோப்பு பெயரின் மூலம் NCMEC க்கு சமர்ப்பிக்கும் அளவிற்கு, இந்தக் கொள்கையில் வரையறுக்கப்பட்ட நோக்கங்களுக்காக அடையாளம் காணக்கூடிய தகவல் செயலாக்கப்படும்.

NCMEC தகவலை மூன்றாம் தரப்பினரிடம் எவ்வாறு வெளிப்படுத்துகிறது

NCMEC பின்வரும் மூன்றாம் தரப்பினரிடம் தகவலை வெளிப்படுத்தலாம்:

  • மூன்றாம் தரப்புத் தளங்கள். இணையத்தில் இருந்து ஹாஷ் செய்யப்பட்ட உங்களின் புகைப்படத்தை அகற்றும் செயல்முறையின் ஒரு பகுதியாக, ஹாஷ் செய்யப்பட்ட புகைப்படங்களை தங்கள் பொது அல்லது மறைகுறியிடப்படாத தளங்கள் மற்றும் பயன்பாடுகளில் ஸ்கேன் செய்ய ஒப்புக்கொண்டுள்ள மூன்றாம் தரப்பு தளங்களுடன் ஹாஷ் செய்யபட்டுள்ள புகைப்படங்களைப் பகிர்வோம். இதன் நோக்கம் அந்த மூன்றாம் தரப்பு தளங்களில் இருந்து உங்கள் புகைப்படங்களை அகற்றுவதாகும். இந்தப் பங்கேற்கும் தளங்கள் பற்றிய அதிகத் தகவலை நீங்கள் இங்கு அறியலாம்.
  • சேவை வழங்குனர்கள். நாங்கள் உங்கள் ஹாஷ் செய்யப்பட்ட புகைப்படத்தை சேவை வழங்குனர்களுக்கு வெளிப்படுத்தலாம். மற்ற விஷயங்களின் ஊடே சேவை வழங்குனர்கள் எங்கள் தளத்தை நிர்வகிப்பது, கருத்தாய்வுகள் நடத்துவது, தொழில்நுட்ப ஆதரவு வழங்குவது, பேமெண்டுகளை செயலாக்குவது மற்றும் ஆர்டர்களை நிறைவேற்ற உதவுவது போன்றவற்றிற்கு உதவலாம்.
  • சட்ட அமலாக்கம். வரவாணைகள், வாரண்டுகள் அல்லது நீதிமன்ற உத்தரவுகள் அல்லது ஏதேனும் சட்டச் செயல்முறைகள் தொடர்பாக அல்லது தொடர்புடைய சட்டங்களுக்கு இணங்க உங்கள் ஹாஷ் புகைப்படத்தை நாங்கள் வெளிப்படுத்தலாம். எங்கள் உரிமைகளை நிறுவ அல்லது பயன்படுத்த, சட்டப்பூர்வ உரிமைகோரலுக்கு எதிராக பாதுகாக்க, சாத்தியமான சட்டவிரோத நடவடிக்கைகள், சந்தேகிக்கப்படும் மோசடி, நபர் அல்லது சொத்து பாதுகாப்பு அல்லது எங்கள் கொள்கையை மீறுதல் குறித்து விசாரணை செய்ய, தடுக்க அல்லது நடவடிக்கை எடுப்பதற்காக உங்கள் ஹாஷ்செய்யப்பட்ட புகைப்படத்தை வெளியிடலாம்.

குக்கீக்கள் மற்றும் பிற தடமறியும் தொழிநுட்பங்கள்

குக்கீகள் என்பது நீங்கள் இணையதளத்தைப் பார்க்கும்போது உங்கள் கணினி அல்லது மொபைல் சாதனத்தில் வைக்கப்படும் சிறிய உரைக் கோப்புகள். அத்தியாவசிய குக்கீகள் இல்லாமல், இணையதளம் தடையின்றி செயல்பட வேண்டும் என நாங்கள் விரும்புவது போல் சீராக செயல்படாது, மேலும் நீங்கள் கோரும் சேவைகளை எங்களால் வழங்க முடியாமல் போகலாம். சில சமயங்களில் “கண்டிப்பாகத் தேவையான” குக்கீகள் என்று குறிப்பிடப்படும் மற்றும் இந்தத் தளத்தின் செயல்பாட்டிற்குத் தேவைப்படும் அத்தியாவசிய குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்தத் தளத்தில் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய குக்கீகள் உங்களைப் பற்றிய அடையாளப்படுத்தும் தகவல்களைச் சேகரிக்காத வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன.

உங்களை அடையாளப்படுத்தும் தகவலைச் சேகரிக்க, நடத்தை சார்ந்த விளம்பரங்கள் அல்லது பிற வகை குக்கீகளை எங்கள் வலைத்தளத்தில் பயன்படுத்த மாட்டோம். அந்த காரணத்திற்காக, இந்த நேரத்தில் “டு நாட் டிராக்” அமைப்புகள் அல்லது விலகல் விருப்பத்தேர்வு சிக்னல்கள் போன்ற பிற தொடர்புடைய வழிமுறைகளுக்கு நாங்கள் பதிலளிப்பதில்லை.

பாதுகாப்பு

நாங்கள், இழப்பு, தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் அங்கீகரிக்கப்படாத அணுகல், வெளிப்படுத்துதல், மாற்றம் செய்தல் அல்லது அழித்தல் ஆகியவற்றிலிருந்து தகவலைப் பாதுகாக்க வணிக ரீதியாக நியாயமான நடவடிக்கைகளை எடுக்கிறோம். எனினும், எந்தவொரு பாதுகாப்பு அமைப்பும் ஊடுருவ முடியாதது இல்லை என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். எங்கள் தரவுத்தளங்களின் பாதுகாப்பிற்கு எங்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது, மேலும் நீங்கள் வழங்கும் தகவல்கள் இணையம் வழியாக எங்களுக்கு அனுப்பப்படும்போது மற்றும் நாங்கள் அனுப்பும்போது இடைமறிக்கப்படாது என்பதற்கும் நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது.

தக்கவைப்பு

இந்தத் தனியுரிமைக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எங்களின் சட்டப்படியான வணிக நோக்கங்கள் நிறைவேற்றப்பட தேவையான காலத்திற்கு உங்களைப் பற்றியும் நீங்கள் எங்கள் தளத்தைப் பயன்படுத்துவது பற்றியுமான தகவலை தக்க வைத்துக்கொள்வோம். நாங்கள் தகவலை எவ்வளவு காலம் தக்க வைப்போம் என்பது தகவலின் தன்மை மற்றும் அது எங்களுக்கு எதற்குத் தேவை என்பதைப் பொறுத்தது. பொருந்தும் சட்டங்கள், தொழில்துறை தரநிலைகள் பரிந்துரைப்பது மற்றும் ஒப்பந்தங்கள் மற்றும் பிற சட்டபூர்வ கடமைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் குறைந்த தேவையான தக்கவைப்புக் காலத்தையும் நாங்கள் கருத்தில் கொள்வோம்.

குழந்தைகளின் தனியுரிமை

13 வயதுக்குக் குறைவான குழந்தைகளிடமிருந்து உட்பட யாரைப் பற்றிய அடையாளப்படுத்தும் தகவலையும் இந்தத் தளம் சேகரிப்பதில்லை. உங்களைப் பற்றிய அல்லது மற்றொரு மைனர் பற்றிய அடையாளப்படுத்தும் தகவலை நாங்கள் கவனமின்றி சேகரித்துள்ளதாக நீங்கள் நம்பினால், தயவுசெய்து 1-800-843-5678 என்ற எண்ணில் எங்களைத் தொடர்புகொள்க.

மூன்றாம் தரப்பினார்கள் மற்றும் பிற வலைத்தளங்களுக்கு லிங்குகள்

நமது தளத்தில் மூன்றாம் தரப்பினர்களின் வலைத்தளங்கள், உள்ளடக்கம் அல்லது அவர்களுக்குச் சொந்தமான அல்லது அவர்களால் இயக்கப்படும் சேவைகளுக்கான லிங்குகள் இருக்கலாம். எங்களுக்குச் சொந்தமில்லாத வலைதளங்கள் அல்லது சேவைகளின் தனியுரிமைக் கொள்கைகளை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது. எந்தத் தகவல் சேகரிக்கப்படுகிறது மற்றும் அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது மற்றும்/அல்லது வெளிப்படுத்தப்படுகிறது என்பது குறித்த விவரங்களுக்கு எந்த ஒரு மூன்றாம் தரப்பு வலைத்தளம் அல்லது பயன்பாட்டை மதிப்பாய்வு செய்ய உங்களை ஊக்குவிக்கிறோம்.

இந்தத் தனியுரிமைக் கொள்கையில் மாற்றங்கள்

எங்களது நடைமுறைகள், தொழில்நுட்பம், சட்டத் தேவைகள் மற்றும் பிற காரணிகளின் மாற்றங்களைப் பிரதிபலிக்க அவ்வப்போது நாங்கள் இந்தத் தனியுரிமைக் கொள்கையைப் புதுப்பிக்கலாம். இந்தத் தனியுரிமைக் கொள்கைகளில் மாற்றங்கள் செய்யப்படும்போது, அவற்றை பதிவு செய்த உடனேயே அவை அமலுக்கு வரும். எங்களது தகவல் செயலாக்க நடைமுறைகள் குறித்த சமீபத்திய தகவலுக்கு இந்தத் தனியுரிமைக் கொள்கையை அவ்வப்போது மதிப்பாய்வு செய்ய உங்களை ஊக்குவிக்கிறோம். எங்களின் தனியுரிமைக் கொள்கை எந்த அளவிற்கு மாறுகிறதோ, அந்த நேரத்தில் நீங்கள் எங்களுக்குத் தகவலைச் சமர்ப்பித்த நேரத்தில் இருந்த தனியுரிமைக் கொள்கையானது, பொருந்தும் சட்டதின் தேவைக்கு ஏற்ப புதிய தனியுரிமைக் கொள்கைக்கு உங்கள் சம்மதத்தைப் (வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ) பெறாதவரை, பொதுவாக அந்தத் தகவலை நிர்வகிக்கும்.

தொடர்புத் தகவல்

உங்களுக்குத் தனியுரிமைக் கொள்கை பற்றிய கேள்விகள் இருந்தால், NCMEC’s Office of Legal Counsel-ஐ பின்வரும் முகவரியில் தொடர்புகொள்ளவும். The National Center for Missing & Exploited Children, 333 John Carlyle St, Suite 125, Alexandria, Virginia 22314; தொலைபேசி எண் 800-843-5678; legal@ncmec.org.

இந்தத் தனியுரிமைக் கொள்கை “அமலுக்கு வரும் தேதி” மற்றும் “கடைசியாகப் புதுப்பிக்கப்பட்ட தேதி” இரண்டையும் உள்ளடக்கியது. அமலுக்கு வரும் தேதி தற்போதைய பதிப்பு அமலுக்கு வந்த தேதியைக் குறிக்கிறது. கடைசியாகப் புதுப்பிக்கப்பட்ட தேதி தற்போதைய பதிப்பு கடைசியாக மாற்றியமைக்கப்பட்ட தேதியைக் குறிக்கிறது.

 

அமலுக்கு வரும் தேதி. டிசம்பர் 30, 2022

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்ட தேதி. டிசம்பர் 30, 2022