Skip to content

Take It Down.
இணையத்தில் உங்களின் நிர்வாணப் புகைப்படங்கள் இருப்பது மிகவும் அச்சம் தரக்கூடியதாகும்,
ஆனால் அவற்றை அகற்றுவதற்கான நம்பிக்கை இருக்கிறது.

உங்களுக்கு 18 வயதாவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட நிர்வாண, அரை நிர்வாண அல்லது ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்திலிருந்து அகற்ற இந்தச் சேவை உதவும்.

தொடங்கவும்

Take It Downஎன்பது என்ன?

Take It Downஎன்பது உங்களுக்கு18 வயதாவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட நிர்வாண, அரைநிர்வாண அல்லது ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்திலிருந்து அகற்ற அல்லது இணையத்தில் பகிரப்படுவதைத் தவிர்க்க உங்களுக்கு உதவக்கூடிய ஒரு சேவையாகும். சேவையைப் பயன்படுத்தும் போது உங்களை அடையாளப்படுத்தும் எந்தத் தகவலையும் நீங்கள் வெளிப்படுத்தத் தேவையில்லை. மேலும் உங்கள் புகைப்படத்தை அல்லது வீடியோவை யாருக்கும் அனுப்பத் தேவையில்லை. Take It Down பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ள பொது அல்லது மறைகுறியிடப்படாத இணைய தளங்களில் வேலை செய்யும்.

இது உங்களுக்கு நடக்கும்போது அச்சம் தருவதாக இருக்கும், ஆனால் இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். நீங்கள் முதல் அடியை எடுத்து வைத்துள்ளீர்கள், அதற்கடுத்த அடிகளை நீங்கள் எடுத்த வைக்க உதவ நாங்கள் இருக்கிறோம். Take It Down என்பது National Center for Missing & Exploited Childrenஅளிக்கும் ஒரு சேவையாகும்.

Take It Down யாருக்கானது?

Take It Downஎன்பது 18 வயதுக்குக் குறைவாக ஒருவர் இருந்ததபோது நிர்வாண, அரை நிர்வாண அல்லது ஆபாச சூழல்களில் அவர்களின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் எடுக்கப்பட்டு அவை இணையத்தில் பகிரப்பட்டுள்ளன அல்லது பகிரப்படும் என்று நம்புபவர்களுக்கான சேவையாகும். உதாரணமாக, நீங்கள் ஒருவருக்கு ஒரு புகைப்படத்தை அனுப்பியிருக்கலாம், ஆனால் இப்போது அவர்கள் உங்களை மிரட்டிக்கொண்டோ அல்லது அதை எங்காவது பதிவிட்டோ இருக்கலாம். அந்தப் புகைப்படம் எங்கு பகிரப்பட்டுள்ளது என்பது குறித்து உங்களுக்கு நிச்சயமாகத் தெரியாவிட்டாலும் கூட, அது இணையத்தில் தோன்றும் இடங்களில் இருந்து அகற்ற உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், இந்த சேவை உங்களுக்கானது.

நீங்கள் 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினாராக இருக்கும்போது எடுக்கப்பட்ட ஆபாச புகைப்படம் இணையத்தில் இருந்தால் , நீங்கள் stopncii.org-இலிருந்து உதவி பெறலாம்.

Take It Down எவ்வாறு வேலை செய்கிறது?

Take It Down, 18 வயதுக்கு குறைவானவர்களின் நிர்வாண, அரை நிர்வாண அல்லது ஆபாச புகைப்படங்கள் அல்லது வீடியோக்களுக்கு ஹாஷ் வேல்யூ எனப்படும் ஒரு தனித்துவமான டிஜிட்டல் ஃபிங்கர்பிரிண்டை ஒதுக்குவதன் மூலம் வேலை செய்கிறது. ஆன்லைன் தளங்கள் தங்கள் சேவைகளில் இந்த புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை கண்டறிய ஹாஷ் வேல்யூக்களைப் பயன்படுத்தலாம். இவை அனைத்தும் புகைப்படம் அல்லது வீடியோ உங்கள் சாதனத்தில் இருந்து நீக்கப்பட்டாமலேயே அல்லது அவற்றை யாரும் பார்க்காமலேயே நிகழும். ஹாஷ் வேல்யூ மட்டுமே NCMEC-க்கு வழங்கப்படும்.

பின்வருமாறு அது வேலை செய்கிறது:

உங்கள் சாதனத்திலிருந்து நீங்கள் ஹாஷ் செய்ய நினைக்கும் ஆபாச புகைப்படம் அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுத்து “தொடங்கவும்” என்பதை கிளிக் செய்க.

ஒவ்வொரு புகைப்படம் அல்லது வீடியோவிற்கு, Take It Down ஒரு “ஹாஷ்” அல்லது டிஜிட்டல் ஃபிங்கர் பிரிண்டை உருவாக்கும், அதை அந்தப் புகைப்படம் அல்லது வீடியோவின் துல்லியமான நகலை அடையாளம் கண்டறியப் பயன்படுத்தலாம்.

உங்கள் புகைப்படம் அல்லது வீடியோ உங்கள் சாதனத்திலேயே இருக்கும், பதிவேற்றப்படாது. ஹாஷ் ஆனது NCMEC பராமரிக்கும் பாதுகாப்பான பட்டியலில் சேர்க்கப்படும். அது உங்கள் ஆபாச உள்ளடக்கத்தின் ஹாஷ்களை தங்கள் பொது அல்லது மறைகுயியிடப்படாத தளங்களை ஸ்கேன் செய்ய இந்தப் பட்டியலைப் பயன்படுத்த ஒப்புக்கொண்டிருக்கும் பங்கேற்கும் இணைய தளங்களுடன் மட்டுமே பகிரப்படும்..

ஹாஷ் வேல்யூவை ஒத்திருக்கும் புகைப்படம் அல்லது வீடியோ ஒன்றை தனது பொது அல்லது மறைகுறியிடப்படாத தளம் ஒன்றில் இணைய தளம் ஒன்று கண்டறிந்தால், ஆபாச உள்ளடக்கத்தின் பரவலைக் குறைக்க அது நடவடிக்கை எடுக்கலாம்.

புகைப்படங்கள்/வீடியோக்களை இங்கு சமர்ப்பித்த பிறகு அவற்றை சமூக ஊடகத்தில் பகிராதீர்கள். உங்கள் புகைப்படம் அல்லது வீடியோவிற்கான ஹாஷ்வேல்யூ பட்டியலில் சேர்க்கப்பட்ட உடன், இணைய தளங்கள் தங்களது பொது அல்லது மறைகுறியிடப்படாத சேவைகளில் ஸ்கேன் செய்ய அவற்றைப் பயன்படுத்தலாம். எதிர்காலத்தில் அந்த உள்ளடக்கத்தை நீங்கள் இடுகையிட்டால், அது குறியிடப்பட்டு உங்கள் சமூக ஊடகக் கணக்கு தடுக்கப்படலாம்.

கடந்த காலத்தில்ஏற்கனவே இடுகையிடப்பட்ட உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான குறைந்த திறன்களையே இணைய தளங்கள் கொண்டிருக்கும். கூடுதல் உதவிக்கு அல்லது உங்கள் புகைப்படம் அல்லது வீடியோ எங்கு இடுகையிடப்பட்டுள்ளது என்ற குறிப்பிட்ட ம்குறித்து உங்களுக்குத் தெரிந்திருந்தால் நீங்கள் CyberTipline-இலும் புகார் அளிக்கலாம், அங்கு எங்களால் உங்கள் கூடுதல் சேவைகள் மற்றும் ஆதரவை வழங்கமுடியும்.

மிக முக்கியமாக, நீங்கள் தனியாக இல்லை என்பதை நினைவுள் கொள்க! இந்த சேவை குறித்த மேலும் தகவலுக்கு மற்றும் பிற வளங்களுக்கு வளங்கள் மற்றும் ஆதரவுப் பக்கத்தைப் பார்க்கவும்.

வளங்களைப் பார்க்கவும்

heading decoration

வளங்கள் மற்றும் ஆதரவு

View Support Resource

பல்வேறு இணைய தளங்களில் நேரடியாக புகார் அளிப்பது குறித்த தகவலுடன் இணையத்தில் உள்ள உள்ளடக்கத்தை அகற்றுவது குறித்த கூடுதல் உதவி தேவைப்பட்டால்.

View Support Resource

இந்தப்புகைப்படங்கள் குறித்து உங்களை மிரட்டும் எவரைப் பற்றியேனும் அல்லது பிற வகையான இணைய சுரண்டல் குறித்து நீங்கள் புகார் அளிக்க நினைத்தால்.

View Support Resource

நீங்கள் அமெரிக்காவில் இருந்தால் மற்றும் உணர்வுரீதியான ஆதரவு குறித்து மேலும் தகவல் வேண்டுமென்றால், NCMEC-இன் மனநல சேவைகள் குறித்து அறிய கீழே கிளிக் செய்க.