Skip to content

ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு உதவி தேவைப்படும். National Center for Missing & Exploited Children-இடமிருந்து ஆதரவு பெற பல வழிகள் உள்ளன.

வெவ்வேறு இணைய தளங்களில் நேரடியாகப் புகாரளிப்பது பற்றிய தகவல்கள் உட்பட இணையத்தில் குறிப்பிட்ட இடத்தில் உள்ள உள்ளடக்கத்தை அகற்றுவதற்கு கூடுதல் உதவி தேவைப்பட்டால்:

NCMEC வழங்கும் பிற ஆதரவுகளைப் பற்றிய தகவலறிய மற்றும் உங்கள் நிர்வாண, அரை நிர்வாண மற்றும் ஆபாச புகைப்படம் அல்லது வீடியோவை அகற்றுவதற்கு அவற்றை குறியிட இணைய தளத்தை எவ்வாறு தொடர்புக்கொள்வது என்பது குறித்த படிப்படியான வழிமுறைகளுக்கு MissingKids.org/IsYourExplicitContentOutThere -ஐப் பார்க்கவும். சில நேரங்களில் இது உங்கள் புகைப்படம் அல்லது வீடியோவை அகற்றுவதற்கான வேகமான பாதையாக இருக்கலாம் மற்றும் கூடுதல் மதிப்புமிக்க தகவலுடன் NCMEC க்கு புகாரளிக்க தளத்தை எச்சரிக்கலாம்.

உங்கள் ஆபாச உள்ளடக்கம் இணையத்தில் இருக்கிறதா?

இந்தப்புகைப்படங்கள் குறித்து உங்களை மிரட்டும் எவரைப் பற்றியேனும் அல்லது பிற வகையான இணைய சுரண்டல் குறித்து நீங்கள் புகார் அளிக்க நினைத்தால்:

NCMEC CyberTipline-ஐ இயக்குகிறது. இது அனைத்து வகையான ஆன்லைன் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கான இணைய புகார் செய்தல் அமைப்பாகும். உங்கள் புகைப்படம் அல்லது வீடியோவின் ஹாஷை Take It Down-க்கு நீங்கள் ஏற்கனவே சமர்ப்பித்திருந்தாலும் கூட, CyberTipline புகார்களைச் சமர்ப்பிக்கலாம். சாத்தியமான விசாரணைக்காக CyberTipline புகார்கள் சட்ட அமலாக்கத்திற்கு கிடைக்கின்றன.

NCMEC-இன் CyberTiplineஐப் பார்வையிடுங்கள்

நீங்கள் அமெரிக்காவில் இருந்தால் மற்றும் உணர்வுரீதியான ஆதரவு குறித்து மேலும் தகவல் வேண்டுமென்றால், NCMEC-இன் மனநல சேவைகள் குறித்து அறிய கீழே கிளிக் செய்க.

நீங்கள் அமெரிக்காவில் இருந்தால் மற்றும் உணர்வுரீதியான ஆதரவு குறித்து கூடுதல் தகவல் வேண்டுமென்றால்: NCMEC-இன் மனநல சேவைகள் குறித்து அறிய கீழே கிளிக் செய்யலாம். மேலும் உதவி கேட்க பல வழிகள் இருக்கின்றன: 1-800-THE-LOST (1-800-843-5678) என்ற எண்ணை அழைக்கலாம் அல்லது செய்தி அனுப்பலாம் அல்லது TakeItDown@ncmec.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினால் உங்களை ஒருவர் தொடர்பு கொள்வார்.

உணர்வுரீதியான ஆதரவுத் தகவல்