Skip to content

உங்களுக்கு18 வயதுக்குக் குறைவாக இருக்கும் போது நீங்கள் நிர்வாணமாகவோ, அரை நிர்வாணமாகவோ அல்லது ஆபாசசூழலில் இருக்கும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் எடுக்கப்பட்டு, அவை இணையத்தில் பகிரப்பட்டிருக்கும் அல்லது பகிரப்படும் என நீங்கள் நம்பினால், இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம். உங்கள் சாதனத்தில் புகைப்படம் அல்லது வீடியோ இருக்கவேண்டும்.

இல்லை, உங்கள் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களுக்கு ஹாஷை உருவாக்க எங்களுடன் எந்தத் தனிப்பட்ட தகவலையும் பகிரத் தேவையில்லை.

இல்லை, நீங்கள் 18 வயதுக்குட்பட்டவராக இருந்து, உலகில் எங்கிருந்தாலும் மற்றும் இணையத்ததில் உங்களுடைய நிர்வாண, அரை நிர்வாண, ஆபாசப் புகைப்படங்கள் பகிரப்பட்டிருந்தால் நீங்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம்.

இந்தச் சேவையில் ஈடுபாடுள்ள பங்கேற்பாளர்கள் பட்டியலைப் பார்க்க பங்கேற்கும் நிறுவனங்கள் பக்கத்தைப் பார்க்கவும். மறைகுறியாக்கப்பட்டுள்ள தளங்களில் இந்தச் சேவையில் பயன்படுத்தும் ஹாஷ் செய்யும் தொழில்நுட்பம் வேலை செய்யாது என்பதை குறிப்பில் கொள்க.

ஆம்! நீங்கள் 18 வயதுக்குட்பட்டவராக இருந்தபோது எடுக்கப்பட நிர்வாண, அரை நிர்வாண அல்லது ஆபாசப் புகைப்படம் அல்லது வீடியோவை ஒருவர் பகிர்ந்தால், அது குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கம் அல்லது குழந்தைகள் ஆபாசப்படம் என சில அதிகார வரம்புகளில் கருதப்படுகிறது. Take It Down-க்குச் சமர்பிக்க புகைபடங்கள் அல்லது வீடியோக்களை பகிர்வதும் இதில் அடங்கும்.

ஆம்! புகைப்படம் அல்லது வீடியோ எடுத்த போது நீங்கள் 18 வயதுக்குட்பட்டவராக இருந்திருந்தால், நீங்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்த முடியும்..

இல்லை! Take It Down-க்குச் சமர்பிக்க எந்த ஒரு நிர்வாண, அரை நிர்வாண அல்லது ஆபாச புகைப்படம் அல்லது வீடியோவை பதிவிறக்கவோ பகிரவோ வேண்டாம். Take It Down மூலம் நிகழும் அனைத்து சமர்ப்பிப்புகளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் முதலில் எடுக்கப்பட்ட சாதனத்தில் (மொபைல், கணினி, டேப்லெட்) செய்யப்படவேண்டும். புகைபடங்கள் அல்லது வீடியோக்கள் எடுக்கப்பட்ட சாதனம் உங்களிடம் இல்லையெனில், cybertipline.org-இல் CyberTipline புகார் அளிப்பதன் மூலம் அல்லது 1-800-THE-LOST என்ற எண்ணை அழைப்பதன் மூலம் உதவியை நாடவும்.

புகைப்படமோ வீடியோவோ ஏற்கனவே பகிரப்பட்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரிந்திருந்தாலும், அது மேலும் பரவுவதைத் தடுக்க இந்தச் சேவையைப் பயன்படுத்துமாறு உங்களை ஊக்குவிக்கிறோம். அந்தக் குறிப்பிட்ட புகைப்படம் அல்லது வீடியோவை அகற்ற உதவி பெற அல்லது கூடுதல் சேவைகள் மற்றும் ஆதரவுக்கு CyberTipline-லும் நீங்கள் புகார் அளிக்கலாம்.

துரதிருஷ்டவசமாக, ஆம். அனைத்து பின்னணி மற்றும் சூழ்நிலைகளில் அனைத்து வயதினரின் நிர்வாண,அரை நிர்வாண அல்லது ஆபாசப் புகைப்படங்கள் இணையத்தில் பெரும்பாலும் பகிரப்படுகின்றன. இதைக் கையாள்வதில் நீங்கள் தனியாக இல்லை, உங்களுக்கு ஆதரவு இருக்கிறது. அதிகத் தகவல் மற்றும் வளங்களுக்கு இந்தத் தளத்தைப் பார்க்கவும்.

ஹாஷ் வேல்யூவை ஒரு டிஜிட்டல் ஃபிங்கர்பிரிண்ட் எனக் கருதவும். ஒவ்வொரு புகைப்படம் அல்லது வீடியோவிற்கு மற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் இருந்து அதை வேறுபடுத்திக் காட்ட தனிப்பட்ட ஹாஷ் வேல்யூ ஒதுக்கப்படுகிறது.

இல்லை, உங்கள் புகைப்படம் அல்லது வீடியோ உங்கள் சாதனத்திலேயே இருக்குமே தவிர இந்தச் செயல்முறையின் ஒரு பகுதியாக சமர்ப்பிக்கப்படாது. உங்கள் புகைப்படம் அல்லது வீடியோவில் இருந்து உருவாக்கப்பட்ட தனித்துவமான ஹாஷ் NCMEC-இன் ஹாஷ் பட்டியலில் சேர்க்கப்பட்டு ஆன்லைன் தளங்களுக்குக் கிடைக்கப்பெறும்.

அந்தத் தகவல்கள் பங்கேற்கும் இணைய தளங்களுக்குக் கிடைக்கும், அவர்கள் தங்கள் பொது அல்லது மறைகுறியிடப்படாத சேவைகளை ஸ்கேன் செய்து, அந்தப் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைக் கண்டறிந்து, அகற்றி, மேலும் பொருத்தமான இடங்களில் NCMEC இன் CyberTipline-க்குப் புகாரளிக்கலாம்.

இல்லை, இது அநாமதேய சேவை என்பதால், ஒரு இணைய தளத்தின் பொது அல்லது மறைகுறியிடப்படாத சேவையில் உங்களின் குறிப்பீட்ட கோப்புகள் கண்டறியப்பட்டால் உங்களுக்குத் தெரிவிப்பதற்கான வழி எதுவும் இல்லை. கூடதல் சேவைகளுக்காக NCMEC-ஐத் தொடர்புகொண்டு அவர்களிடம் உங்கள் பெயர் மற்றும் தொடர்புத் தகவலை பகிர்வது உங்களுக்கு இயல்பாகத் தோன்றினால் TakeItDown@ncmec.org-இல் எங்களைத் தொடர்பு கொள்க.

இல்லை, பங்கேற்கும் இணைய தளங்கள் தங்களின் பொது அல்லது மறைகுறியிடப்பட்டாத சேவைகளில் உங்கள் புகைப்படம் அல்லது வீடியோவிற்காக ஸ்கேன் செய்ய முடிந்தாலும், உள்ளடக்கம் பிற தளங்களில் பதிவேற்றப்படுவதை இது தடுக்காது. கடந்தகாலத்தில் ஏற்கனவே இடுகையிடப்பட்ட உள்ளடக்கத்தை அகற்றும் திறன் இணைய தளங்களுக்குக் குறைவே. எந்த வலைப்பக்கத்திலாவது அல்லது சமூக ஊடகப் பக்கத்திலாவது நீங்கள் ஆபாசப் பாடத்தைப் பார்த்தால், அதை CyberTipline http://www.cybertipline.org/-இல் புகாரளிக்கவும், நாங்கள் உங்களுடன் வேலை செய்து அதை அகற்ற உதவுவோம்.

உங்களுக்கு கூடுதல் கேள்விகள் இருந்தால் அல்லது அதிக உதவி தேவைப்பட்டால்,TakeItDown@ncmec.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உங்களுக்கு கிடைக்கக்கூடிய வளங்கள் பற்றிய அதிகத் தகவலுக்கு வளங்கள் மற்றும் ஆதரவு பக்கத்தைப் பார்க்கவும்

இல்லை,புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை NCMEC -இல் பகிரப்பட்ட ஹாஷ் வேல்யூ மூலம் பின்னோக்கி பழைய நிலைக்குத் திருப்பவோ உருவாக்கவோ முடியாது

முதலில், உதவி இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும், நீங்கள் தனியாக இல்லை. NCMEC அனைத்து வகையான ஆன்லைன் குழந்தைகள் பாலியல் சுரண்டலுக்கான இணைய புகார் அளித்தல் அமைப்பான CyberTipline ஐ இயக்குகிறது இது. உங்கள் நிர்வாணப் புகைப்படத்தை பரப்புவதாக யாரேனும் மிரட்டினால் அல்லது உங்களை மிரட்டி பணம் பறிக்க நினைத்தால், உங்கள் புகைப்படம் அல்லது வீடியோவை ஸ்கேன் செய்து ஹாஷைச் சமர்ப்பிக்க இந்தச் சேவையை நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தியிருந்தாலும், CyberTiplineபுகாரை உருவாக்க வேண்டும். நீங்கள் www.cybertipline.org இல் புகார் செய்யலாம் அல்லது 1-800-THE-LOST (1-800-843-5678) என்ற எண்ணை அழைக்கலாம்.